
மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 18 ஆவது போட்டியில் இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 18 ஆவது போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. இதில், ஷபாலி வர்மா 31 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில், மிகவும் சிறப்பாக விளையாடி மரிசேன் காப் 81 ரன்கள் எடுத்து அசத்தினார்.


