
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து குறைந்த பட்ஜெட் படங்களையும் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியிடுவதற்கு தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அத்தகைய தருணங்களில் சிறிய பட்ஜெட் படங்கள் ரசிகர்களுக்குப் பிடித்து விட்டால் அந்தத் திரைப்படம் தொடர்ந்து வசூலை அள்ளிக் குவித்து விடும்.
அது போன்ற சம்பவம்தான் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தின் வெளியீட்டின் போதும் நடந்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி வெளியான ஜவான் திரைப்படம் உலகம் முழுவதும் 1150 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது.
இந்தப் படத்துடன் புக்ரே 3 என்ற திரைப்படம் வெளியிடப்பட்டது. அதற்கு முன்பாக முதல் 2 பாகங்கள் வெளிவந்து சுமாரான வரவேற்பையே பெற்றன.
இந்தப் புக்ரே3 படத்தில் பங்கஜ் திரிபாதி, புல்கிட் சாம்ராட், ரிச்சா சாதா உள்ளிட்ட நடிகர்கள் இடம் பெற்றிருந்தனர்.
காமெடி திரில்லர் ஜேனரில் வெளியான இந்தத் திரைப்படம் தொடர்ந்து ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றது.
39 நாட்கள் ஓடிய இந்தத் திரைப்படம் ஜவான் படத்திற்கு ஓரளவு சவாலாக இருந்து வந்தது. மொத்தமே 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான புக்ரே 3 திரைப்படம் 128 கோடி ரூபாய் அளவில் வசூல் செய்து ரெக்கார்டை ஏற்படுத்தியது.
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து குறைந்த பட்ஜெட் படங்களையும் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியிடுவதற்கு தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
