
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 11ஆம் நாளும், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு மார்ச் இரண்டாம் நாளும் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளுக்கான அட்டவணையைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் இரண்டாம் நாள் தொடங்கி மார்ச் 26 வரை நடைபெறவுள்ளது. 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 11ஆம் நாள் தொடங்கி ஏப்ரல் ஆறாம் நாள் வரை நடைபெறவுள்ளது.
12ஆம் வகுப்புக் கணக்குப்பதிவியல் தேர்வில் கால்குலேட்டர் பயன்படுத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்றது.




