cinima news:மாடர்ன் உடையில் வேற லெவல்… இணையத்தை கலக்கும் ராஷி கண்ணா!

நடிகை ராசி கண்ணா தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தியெனப் பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

ராஷி கண்ணா நடிப்பில் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான அரண்மனை 4 படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

ராசி கண்ணா தமிழ் படங்களில் நடித்துத் தமிழ் ரசிகர்களை ஈர்த்தார். அடங்க மறு படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார். அவர் நடித்த பெங்கால் டைகர் (2015), சுப்ரீம் (2016), ஜெய் லவ குசா (2017) மற்றும் தோலி ப்ரேமா (2018) போன்றவை அவருக்கு வெற்றியைக் கொடுத்த திரைப்படங்கள் ஆகும்.

அயோத்தி , சீனிவாச கல்யாணம், திருச்சிற்றம்பலம் , துக்ளக் தர்பார் உள்ளிட்ட பல பிரபலமான படங்களில் அவர் நடித்துள்ளார். சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கும் யோதா என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். மேலும் தி சபர்மதி ரிப்போர்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவர் நடித்துச் சமீபத்தில் வெளியாகிய பார்ர்சி என்ற வெப்சீரிஸ் ஹிட்டாகியுள்ளது. இது அமேசான் பிரைமில் ரிலீசாகியுள்ளது. ஹிந்தி மொழியில் வெளியான இந்தச் சீரிஸ் 4 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்பு ருத்ரா என்ற வெப் தொடரில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்தார்.

விக்ராந்த் மாஸ்ஸியுடன் இணைந்து TME என்ற ஹிந்திப் படத்தின் படப்பிடிப்பை கன்னா முடித்துள்ளார். மேலும் சித்து ஜொன்னலகடாவுடன் தெலுசு கட என்று பெயரிடப்பட்டுள்ள தெலுங்குப் படத்திலும் கன்னா ஒப்பந்தமாகியுள்ளார்,

ஜீவா மற்றும் அர்ஜுன் இணைந்து நடிக்கும் மேதாவி படத்தில் நடித்து வருகிறார். சுந்தர் சி. மற்றும் தமன்னாவுடன் அரண்மனை 4 தற்போது வெளியாகி உள்ளது. ராசி இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தனது குடும்பத்துடன் அடிக்கடி புகைப்படங்கள் வெளியிடும் ராஷி தற்போது க்ரே நிற ட்ரெஸ்ஸில் போட்டோஷூட்டை ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் படங்கள் வெளியாகி மக்களை ஈர்த்தது போல இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *