Saamaniyan Audio Launch: ராமராஜனை பார்த்து ரஜினி பயந்துவிட்டார்!

Advertisements

ராமராஜன் நடித்துள்ள ‘சாமானியன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கலந்து கொண்டார்.

சென்னை:’எங்க ஊரு பாட்டுக்காரன்’, ‘கரகாட்டக்காரன்’ உள்ளிட்ட கிராமத்து கதைக்களம் கொண்ட படங்களில் நடித்துத் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகர் ராமராஜன். 80-களில் ராமராஜன் நடித்தப் படங்கள் எல்லாம் வெற்றி பெற்று நல்ல வசூல் குவித்தது. ராமராஜன் படங்களின் வசூலைப் பார்த்து நடிகர் ரஜினிகாந்தே பயப்பட்டாரென இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கூறியுள்ளார்.

ராமராஜன் நடித்துள்ள ‘சாமானியன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கூறியதாவது:- “ரஜினி சாரே ஒருமுறை என்னிடம் ராமராஜன் பற்றிக் குறிப்பிடும்போது, அவருக்கு இருக்கும் அந்த மாஸ் ஓப்பனிங் கலெக்சனை பார்த்து நமக்குப் போட்டியாக முன்னாடி போய்க் கொண்டிருக்கிறாரெனப் பயந்துவிட்டேன் என்று கூறினார்” இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *