COPD எனப்படும் நுரையீரல் அடைப்பு நோய்.!
நுரையீரலுக்கு செல்லக்கூடிய காற்றோட்டத்தில் தடங்கல் ஏற்படுத்துகிறது. உலகம் முழுவதும் சிஓபிடி இறப்பு மற்றும் நோயுற்ற நிலைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி 65 மில்லியன் மக்கள் உலக அளவில் சிஓபிடியால் மிதமான முதல் கடுமையான முறையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இந்நோயின் தாக்கம் கடுமையாக உள்ளது. 2% லிருந்து22% ஆண்களுக்கும், 1.2% லிருந்து 19% வரை பெண்களுக்கும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
முக்கியமான அடையாளங்களும் அறிகுறிகளும் என்ன?
ஆரம்ப கட்டத்தில் ஒருவரால் நி நோயின் அறிகுறிகள் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இதன் அறிகுறிகள் மற்ற சுவாச நிலைகளோடு ஒன்று சேர்ந்திருக்கும் காரணத்தினால் இதுபோல நிகழும்.
1.சுவாசிப்பதில் சிரமம்
2.இருமல்
3.அதிகப்படியான சளி சுரப்பு/சேர்க்கை
4.மூச்சிரைப்பு
5.மார்பு இறுக்கம்
6.உதடுகள் அல்லது விரல் நகங்கள் நீல நிறமாக மாறுதல்
7.களைப்பு
8.அசாதாரண எடை இழப்பு
சிஓபிடி மூன்று முன்னேற்றமடையக்கூடிய நுரையீரல் நிலைகளைக் கொண்டுள்ளது: அவை நீண்ட கால மூச்சுக்குழாய் அழற்சி, காற்றேற்ற விரிவு(எம்பிஸிமா) மற்றும் மீள முடியாத ஆஸ்துமாவே ஆகும். நீண்டகால மூச்சுக்குழாய் அழற்சியை கொண்டிருப்பவர்களுக்குத் தொடர்ச்சியான இருமல் மற்றும் சளி சுரப்பு போன்ற அறிகுறிகள் காணப்படும். காற்றேற்ற விரிவு ஏற்படும்போது, காற்று நுண்ணறைகள்/ஆல்வொளி (நுரையீரலில் உள்ள சிறிய காற்று பைகள்) பாதிக்கப்படுவதோடு, சிகரெட் புகை போன்ற பல வாயு எரிச்சலூட்டிகளின் காரணத்தினால் அழிக்கப்படுகின்றன.
புகைபிடித்தல் மற்றும் இயற்கை எரிபொருள்களின் வெளிப்பாடு அல்லது வீட்டில் சமைக்கும்போது வெளிப்படும் புகை ஆகியவகையே சிஓபிடியின் மிக முக்கியமான ஆபத்துக் காரணி மற்றும் காரணம் ஆகும். ஒரே நேரத்தில் ஏற்படக்கூடிய பிற ஆபத்து விளைவிக்கும் காரணிகள் இதய நோய், நெஞ்சு எரிச்சல், மன அழுத்தம் அல்லது நீரிழிவு நோய் போன்றவைகளே ஆகும்.
பாஸ்ஸிவ் புகை (புகைபிடிக்கையில் உண்டாகும் புகையினை சுவாசித்தல்) மற்றும் ஆல்பா -1 குறைபாடு காரணமாக ஏற்படும் ஒரு அரிதான மரபணு நிலைக்கும் சிஓபிடி ஏற்படுவதற்கு பங்கு வகிக்கிறது. ஆஸ்துமா சிஓபிடியை மேலும் அதிகரிக்கக்கூடியது.
புகைபிடிப்பதை நிறுத்துதல், புகையினால் ஏற்படும் வெளிப்பாடு மற்றும் சுவாசக்குழாய் பாதைக்குப் பாதிப்பேற்படுத்தும் எரிச்சலூட்டிகளின் வெளிப்பாடு ஆகியவற்றை தவிர்த்தல்.
மருந்துகள்:
- ப்ராஞ்சோடிலேட்டர்ஸ்
- சுவாசிக்கப்படும் ஸ்டீராய்டுகள்.
- ஒருங்கிணைந்த இன்ஹேலர்கள்.
- பாஸ்போடைஸ்டிரரேஸ்-4 இன்ஹிபிட்டர்.
- ஆண்டிபையோட்டிக்ஸ்
ஆக்ஸிஜன் தெரபி, நுரையீரல் மறுவாழ்வு திட்டங்கள் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.
சிஓபிடி என்பது குணப்படுத்த முடியாத தொடர் நோய், ஆனால் சரியான நோய் கண்டறிதல் மற்றும் முறையான சிகிச்சையினால், ஒருவரால் சிஓபிடியை கையாண்டு சிறந்த வாழ்க்கை தரத்தை அடைய முடியும்.