
வார ராசிபலன் 29.09.2024 முதல் 05.10.2024 வரை
12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்
இந்த வாரராசிபலன்:
மேஷம்
தடைபட்ட காரியங்களைத் தடாலடியாகச் செய்து முடிக்கும் காலகட்டம் இது. வியாபாரிகளுக்கு இந்த வாரம் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். தொழில் துறையினருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கப்பெற்று குதூகலம் அடைவார்கள். உத்தியோகஸ்தர்கள் பல்வேறு விதமான பணிகளைச் செய்து பணியிடத்தில் பாராட்டு பெறுவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் இந்த வாரம் நிதானமாகச் செயல்பட வேண்டும். ஷேர் மார்க்கெட் துறையினர் எந்திரங்கள் மற்றும் எரிபொருள் சம்பந்தமான பங்குகளில் லாபம் அடைவார்கள். கலைத்துறை அன்பர்கள் இந்த வாரம் புதிய தொடர்புகளால் நன்மை பெறுவார்கள். மீடியா துறையினர் புதுமையாகச் சிந்தித்து செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். இல்லத்தரசிகள் மனதில் இந்த வாரம் மகிழ்ச்சி நிலவும். நண்பர்களைச் சந்தித்து அளவளாவி மகிழ்வார்கள்.
ரிஷபம்
பல்வேறு காரிய தடைகளைக் கடந்து பல விஷயங்களைச் செய்தாக வேண்டிய வாரம் இது. வியாபாரிகள் இந்த வாரம் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடினமாக உழைக்க வேண்டும். தொழில் துறையினருக்கு வரவேண்டிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடை தாமதங்கள் ஏற்படும். ரியல் எஸ்டேட் துறையினர் இந்த வாரம் நிதானமாகச் செயல்பட வேண்டும். புதிய வாடிக்கையாளர் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஷேர் மார்க்கெட் துறையினர் இந்த வாரம் புதிய முதலீடுகளைச் செய்ய வேண்டாம். கலைத்துறை அன்பர்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்த சந்தர்ப்பத்தைப் பெறுவார்கள். மீடியா துறையினர் இந்த வாரம் கஷ்ட நஷ்டம் பார்க்காமல் கூடுதலாக உழைக்க வேண்டும். இல்லத்தரசிகளை பொறுத்தவரை இது குதூகலமான வாரம். இந்த வாரம் புதிய முயற்சிகளைத் தொடங்குவது மற்றும் இரவு பிரயாணங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
மிதுனம்
சிறிய விஷயங்களில் கூட அதிக முயற்சி எடுத்துக் காரிய வெற்றி பெற வேண்டிய காலகட்டம் இது. விடாமுயற்சி வெற்றி தரும். வியாபாரிகளைப் பொறுத்தவரை இந்த வாரம் எதிர்பார்த்த லாபத்தை பெறுவார்கள். தொழில் துறையினருக்கு அரசு காரியங்களில் எதிர்பார்த்த அனுகூலம் உண்டு. பணியிட மாற்றம் அல்லது வேறு நிறுவனத்திற்கு மாற விரும்பிய உபயோகஸ்தர்கள் அதைப் பெறுவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் இந்த வாரம் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். ஷேர் மார்க்கெட் துறையினர் நிலக்கரி மற்றும் இரும்பு நிறுவன பங்குகள்மூலம் ஆதாயம் அடைவார்கள். மீடியாவில் இருப்பவர்கள் உற்சாகமாகச் செயல்படுவார்கள். கலைத்துறை அன்பர்கள் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவார்கள். இல்லத்தரசிகளுக்கு இது மகிழ்ச்சியான வாரம்.
கடகம்
பல்வேறு இடங்களுக்குப் பிரயாணம் செய்வதால் மனதில் ஒருவித சலிப்பு ஏற்படும் காலகட்டம். தொழில்துறையினருக்கு உற்பத்தி அதிகரித்து லாபம் பெறுவார்கள். வியாபாரிகள் புதிய பணியாளர்களை நியமித்து வர்த்தகத்தை மேம்படுத்துவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாகச் செயல்பட்டு நிர்வாகத்தினருடைய பாராட்டைப் பெறுவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் இந்த வாரம் புதிய திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஷேர் மார்க்கெட் துறையினர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அரசுத்துறை பங்குகளில் லாபம் பெறுவார்கள். கலைத்துறையில் இருப்பவர்கள் குதூகலமாகச் செயல்படுவார்கள். மீடியா துறையினர் புது வாய்ப்புகளைப் பெறுவார்கள். இல்லத்தரசிகளை பொறுத்தவரை கைகளில் பணம் புரளும். செவ்வாய் மற்றும் புதன் ஆகிய நாட்களில் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.
சிம்மம்
தடைபட்ட பல விஷயங்கள் படிப்படியாக நடந்தேறும் காலகட்டம் இது. தொழில் துறையினர் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவார்கள். வியாபாரிகளுக்குப் புது வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாகச் செயல்பட்டு நிர்வாகத்தில் பாராட்டு பெறுவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் இந்த வாரம் புதிய திட்டங்களைத் தொடங்குவதை தள்ளி வைக்க வேண்டும். ஷேர் மார்க்கெட் துறையினர் ரியல் எஸ்டேட் மற்றும் ஆடை ஆபரணங்கள் சார்ந்த பங்குகளில் லாபம் அடைவார்கள். கலைத்துறையில் இருப்பவர்கள் சமயோசிதமாகச் செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். மீடியா துறையினர் எதிர்பார்த்த புது வாய்ப்புகளை அடைவார்கள். இல்லத்தரசிகள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் இரவு பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.
கன்னி
மனதில் தெம்பும், தைரியமும் உருவாகும் காலகட்டம். புதிய நபர்களால் நன்மை உண்டாகும். தொழில் துறையினர் நிதானமாகச் செயல்பட வேண்டிய காலகட்டம் இது. வியாபாரிகள் வர்த்தகத்தை அதிகரிக்க வழக்கத்தைவிட கூடுதல் விளம்பரம் செய்ய வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியிடத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினருக்கு புதிய திட்டங்களைத் தொடங்குவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஷேர் மார்க்கெட் துறையினர் ரியல் எஸ்டேட் மற்றும் வங்கித் துறை சார்ந்த பங்குகளில் ஆதாயம் அடைவர். கலைத்துறையில் இருப்பவர்கள் எதிர்பார்த்திருந்த வாய்ப்பைப் பெறுவார்கள். மீடியாவில் இருப்பவர்கள் ஊதிய உயர்வு பெற்று குதூகலம் அடைவார்கள். இல்லத்தரசிகளை பொறுத்தவரை உறவினர் வருகையால் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
துலாம்
மகிழ்ச்சி நிலவும் வாரம் இது. தடைபட்ட பல நல்ல காரியங்கள் நிறைவேறும். தொழில் துறையில் இருப்பவர்கள் புதிய திட்டங்களைத் தொடங்குவதை இந்த வாரம் தள்ளி வைக்க வேண்டும். வியாபாரிகள் மந்தமான வர்த்தக நிலையை எதிர்கொள்வார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் சிறப்பாகச் செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவார்கள். ஷேர் மார்க்கெட் துறையினர் உணவுப் பொருள்கள் மற்றும் இயந்திரங்கள் சம்பந்தமான பங்குகளில் ஆதாயம் அடைவார்கள். கலைத்துறையினருக்கு மகிழ்ச்சியான வாரம் இது. மீடியாவில் இருப்பவர்கள் எதிர்பார்த்த அங்கீகாரத்தை பெறுவார்கள். பெண்மணிகள் குடும்ப உறுப்பினர்களோடு கருத்து வேறுபாடு பாராட்ட வேண்டாம். புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் இரவு பயணங்களைத் தவிர்ப்பதுடன் வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களில் புதிய முயற்சிகளையும் தவிர்க்க வேண்டும்.
விருச்சிகம்
நடக்கும் என்று நினைத்த விஷயங்கள் நடந்து முடிவதில் தடை தாமதங்கள் ஏற்படும். வியாபாரிகள் சரியாகத் திட்டமிட்டு தங்களுடைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தொழில்துறையினர் தொழிலாளர் பிரச்சினைகளைக் கவனித்து சரி செய்ய வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருவது அவசியம். ரியல் எஸ்டேட் துறையினர் இந்த வாரம் புதிய திட்டங்களைத் தவிர்க்க வேண்டும். ஷேர் மார்க்கெட் துறையினர் ரியல் எஸ்டேட் மற்றும் வங்கித் துறை சார்ந்த பங்குகளில் ஆதாயம் பெறுவார்கள். மீடியா மற்றும் கலை துறையினர் எதிர்பாராத வாய்ப்புகளைப் பெற்று மகிழ்வார்கள். இல்லத்தரசிகள் இந்த வாரம் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது.
தனுசு
கடந்த கால சிக்கல்களிலிருந்து விடுபடக்கூடிய காலகட்டம் இது. தொழில் துறையினர் பல்வேறு விதங்களில் ஆதாயம் அடைவார்கள். வியாபாரிகள் தங்களுடைய உழைப்பிற்கு ஏற்ற லாபத்தை பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டி பாராட்டு பெறுவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் அரசு ரீதியான தடை தாமதங்கள் விலகிப் புதிய திட்டங்களைத் தொடங்குவார்கள். ஷேர் மார்க்கெட் துறையினர் இந்த வாரம் எதிர்பார்த்த ஆதாயத்தைப் பெறுவதில் தடைகள் ஏற்படும். கலைத்துறையினர் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவார்கள். மீடியா துறையினருக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும் காலகட்டம் இது. இல்லத்தரசிகளுக்கு வாழ்க்கை துணையுடன் வாக்குவாதம் ஏற்பட்டு விலகும். செவ்வாய் மற்றும் புதன் ஆகிய நாட்களில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
மகரம்
தனக்கு தொடர்பில்லாத விஷயங்களில் ஈடுபடுவதை இந்த வாரம் தவிர்க்க வேண்டும். தொழில்துறையினர் புதிய மாற்றங்களை மேற்கொண்டு எதிர்பார்த்த ஆதாயம் பெறுவார்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் ஆதரவை பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மறைமுக எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர் இந்த வாரம் எதிர்பார்த்திருந்த ஆதாயத்தை அடைவார்கள். ஷேர் மார்க்கெட் துறையினர் அரசுத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகளில் அளவான ஆதாயம் அடைவார்கள். கலைத்துறையினர் திறமையாகச் செயல்படும் காலகட்டம் இது. மீடியாவில் இருப்பவர்கள் நல்ல வாய்ப்புகளைப் பெற்று தங்களை நிரூபணம் செய்வார்கள். இல்லத்தரசிகளை பொறுத்தவரை குடும்ப விவகாரங்களில் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவிக்கக் கூடாது. புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் இரவு பிரயாணங்களை தவிர்க்க வேண்டும்.
கும்பம்
மனதில் ஒருவித நிம்மதி நிலவும் காலகட்டம் இது. தொழில் துறையினர் வெளிவட்டார தொடர்களால் நன்மை அடைவார்கள். வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்று லாபம் ஈட்டுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியிடத்தில் பல எதிர்ப்புகளை சந்தித்து சமாளிக்க வேண்டியதாக இருக்கும். ரியல் எஸ்டேட் துறையினர் எதிர்பார்த்த ஆதாயத்தைப் பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் துறையினர் அழகு சாதன பொருட்கள் மற்றும் நிலக்கரி ஆகிய பங்குகளில் ஆதாயம் அடைவார்கள். கலைத்துறை அன்பர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வாய்ப்புகளைப் பெறுவார்கள். மீடியாவில் இருப்பவர்கள் பல சிக்கல்களைச் சந்தித்து தங்களை நிரூபிக்க வேண்டியதாக இருக்கும். இல்லத்தரசிகள் பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்தி நிம்மதி அடைவார்கள்.
மீனம்
அனைத்து விஷயங்களையும் அமைதியாக அணுக வேண்டிய காலகட்டம் இது. தொழில் துறையில் இருப்பவர்கள் விரிவாக்கப் பணிகளைச் செய்யலாம். வியாபாரிகள் வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளைத் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் சக ஊழியர்கள் ஆதரவை பெறுவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் இந்த வாரம் புதிய திட்டங்களை மேற்கொள்ளலாம். ஷேர் மார்க்கெட் துறையினர் வங்கித் துறை மற்றும் அழகு சாதன பொருட்கள் பங்குகள் மூலமாக அளவான ஆதாயம் அடைவார்கள். கலைத்துறையில் இருப்பவர்கள் புதிய சிந்தனைகளோடு களமிறங்கி தங்களை நிரூபிக்க வேண்டும். மீடியாவில் இருப்பவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து நடக்க வேண்டும். இல்லத்தரசிகளை பொறுத்தவரை குடும்ப சிக்கல்களை அமைதியாக எதிர்கொள்ள வேண்டும். வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

