Chithirai Festival 2024: சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு மிசுமங்கலி பெண்கள் மாவிளக்கு பூஜை செய்து வழிபாடு!

Advertisements

தூத்துக்குடியில்  சித்திரை மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில்சுமங்கலி பெண்கள் கலந்து கொண்ட504 மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண்கள் லலிதா சஹஸ்ரநாமத்தை கூறி வழிபாட்டில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில்  சித்திரை மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில்  பாகம்பிரியாளுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டுநடந்த  சிறப்புப் பூஜையில்  ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். மேலும் 504 மாவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது இதில் ஏராளமான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர்.

சித்திரை மாதம் வரும் பௌர்ணமி தினம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் சித்திரை மாத பௌர்ணமியை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம் பிரியாள் உடனூரை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் சங்கர அமைச்சருக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. இதே போன்று பாகம்பிரியாளுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்புப் பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது இதையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி மற்றும் அம்பாளை நீண்ட வரிசையில் நின்றபடி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் சித்திரை மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஆலய வளாகத்தில்  சுமங்கலி பெண்கள் கலந்து கொண்ட504 மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண்கள் லலிதா சஹஸ்ரநாமத்தை கூறி வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *