China: பெய்ஜிங்கில் கனமழை வெள்ளப் பெருக்கு ஆகியவற்றால் முப்பது பேர் உயிரிழப்பு!

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கனமழை வெள்ளப் பெருக்கு ஆகியவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளில் முப்பது பேர் உயிரிழந்தனர்.
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது.

சாலைகளில் கால்வாய்போல் வெள்ளம் பாய்வதால் வாகனப் போக்குவரத்தும் முடங்கியுள்ளது.
தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் எண்பதாயிரம் பேர் வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான பிற இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழை, வெள்ளம், மரங்கள் முறிந்து விழுந்தது உள்ளிட்ட நேர்வுகளில் முப்பது பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும் தேடுதல் பணிகளைத் தீவிரப்படுத்தவும் அதிபர் சி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *