
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக கட்சி தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாளான இன்று ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத் தளப்பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். இதில், குழந்தைகளின் மீது தாயன்பு காட்டி, உங்கள் கனவுகளுக்கெல்லாம் துணைநிற்கும் திராவிட மாடல் அரசின் சார்பில் தனது குழந்தைகள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும், குழந்தைகளின் வெற்றியைக் கண்டு மகிழ்வதாகவும்,பகுத்தறிவு கொண்ட உலகக் குடிமக்களாக வளர்த்தெடுப்பேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில், அன்பிற்குரிய தமிழகத்தின் செல்லக் குழந்தைகள் அனைவருக்கும் தனது இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் தெரிவித்தார்.
இதையடுத்து,உங்கள் கனவுகள் பெரியதாகவும் அந்தக் கனவுகளை நிறைவேற்ற முயற்சி, சக்தி, துணிவு ஆகிய மூன்றும் துணை நிற்கட்டும் என்றார்..



