
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 16 வயது இளம் செஸ் வீரர் கிராண்ட்மாஸ்டராக ஆன இளம்பரிதிக்குப் தனது எக்ஸ் தளத்தில் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
போஸ்னியா, ஹெர்சகோவினாவில் நடைபெற்ற பிஜெல்ஜினா ஓபன் செஸ் தொடரில், சென்னையைச் சேர்ந்த 16 வயது இளம் செஸ் வீரர் போட்டியில் கலந்து கொண்டு, வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இதைத்தொடர்ந்து, 16 வயது இளம் வீரர் இளம்பரிதி இந்தியாவின் 90 ஆவதும், தமிழ்நாட்டின் 35 ஆவதும் கிராண்ட்மாஸ்டர் ஆனார்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், இளம்பரிதிக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவர், சதுரங்கத்தில் தமிழ்நாட்டின் 35 ஆவது கிராண்ட்மாஸ்டராக இளம்பரிதி சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் தமிழ்நாட்டின் சாம்பியன் கிரீடத்தில் இளம்பரிதி மற்றொரு ரத்தினத்தைச் சேர்த்துள்ளார். தமிழ்நாடு சதுரங்கத்தில் சூரியன் உதிக்கும் போது, இன்னும் பல கிராண்ட்மாஸ்டர்கள் உருவாகின்றனர் என்று பதிவிட்டுள்ளார்.



