Israel-Palestine war : இஸ்ரேல் கொடூர தாக்குதல்..பலி எண்ணிக்கை 53,573 ஆக உயர்வு!

Advertisements

 

போர் ஒப்பந்தத்தை மீறி   இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசாவில் இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி முதல் இஸ்ரேல்-காசா இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது.  இருநாடுகள் இடையே ஏற்பட்ட போரை நிறுத்துவதற்கு கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அதன்படி இருதரப்பினர் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில்  ஹமாஸ் அமைப்பினர் சிறை பிடித்து வைத்துள்ள 33 பணயக் கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டனர். இதேபோல் இஸ்ரேலும் புலம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களை சொந்த கிராமத்திற்கு செல்ல வழி வகைசெய்யவதாக  ஒப்புக்கொண்டது. இதற்கிடையே போர் ஒப்பந்ததை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 28 குழந்தைகள் மற்றும் 31 பெண்கள் உட்பட 115 பேர் உயிரிழந்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தாக்குதலில்  265 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக  காசாவின் சிவில் பாதுகாப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பாசல் தெரிவித்துள்ளார். இதுவரை காசாவில் இஸ்ரேல் நடத்திய  தாக்குதலில் 53,573 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *