Chennai : அண்ணா நகரில் 97 கோடி ரூபாயில் கட்டப்பட்ட அலுவலகக் கட்டடம் திறப்பு.!

Advertisements

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறைக் குழுமம், தமிழ்நாடு கட்டட மனை விற்பனை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் ஆகியவற்றுக்கான அலுவலகக் கட்டடத்தைத் திறந்து வைத்துள்ளார்.

சென்னை அண்ணா நகரில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறைக் குழுமம், தமிழ்நாடு கட்டட மனை விற்பனை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் ஆகியவற்றுக்கு 97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்தைத் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *