வேறுசில நபர்களுடன் போனில் பேசி வந்ததால் கள்ளகாதலியை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
கோவை மதுக்கரை பகுதியைச் சேர்ந்த வசந்தகுமாரி.இவர் தனது கணவரை இழந்து மகன்கள் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீ நிதிஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார்.இவர் வீட்டின் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் தின கூலி வேலைக்குச் சென்று வருகிறார்.இதனிடையே வசந்தகுமாரிக்கு வீட்டின் அருகே செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரும் பேச்சிமுத்து என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இருவரும் கடந்த இரண்டு வருடமாகத் தகாத உறவிலிருந்து வந்த நிலையில் சில மாதங்களாக வசந்தகுமாரி வேறுசில நபர்களுடன் போனில் பேசி வந்ததை பேச்சிமுத்து கண்டித்து உள்ளார்.
இந்நிலையில் வசந்தகுமாரியின் வீட்டில் இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முடிவில் பேச்சிமுத்து வசந்தகுமாரியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே வசந்தகுமாரி உயிரிழந்து உள்ளார்.வசந்தகுமாரியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் அருகில் வசித்து வந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மதுக்கரை போலீசார் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கள்ளக்காதலணை கைது செய்த போலீசார் கொலை சம்பவம்குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
