
சென்னை:தாம்பரம் அடுத்த பள்ளிக்கரணை பகுதியில் வசித்து வருபவர் மகேஸ்வரன் (வயது-44). இவருக்குத் திருமணம் ஆகி இரண்டு பெண் பிள்ளைகளுள்ள நிலையில், மகேஸ்வரன் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகின்றார்.
இந்த நிலையில் அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வெளியில் விளையாடிக் கொண்டு இருந்த 13,வயது சிறுமியிடம் சென்று வலுக்கட்டாயமாகத் தூக்கிக் கொண்டு வீட்டின் படுக்கையில் வைத்து 13,வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
அந்தச் சிறுமி மகேஷ்வரிடமிருந்து தப்பித்து தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார், அதன் பிறகு உடனே இதுகுறித்து சிட்லபாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் மகேஸ்வரனை அழைத்து விசாரணை செய்தபோது பாலில் தொந்தரவில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டான்.அதன் பிறகு அவர்மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகேஸ்வரனுக்கு திருமணம் ஆகி 15,மற்றும் 11 வயதில் இரு பெண் குழந்தையும் உள்ள நிலையில் தனது மகள்போல் இருக்கும் 13,வயது சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

