சென்னை பிரஸ் கிளப்-க்கு தேர்தல் தேதி அறிவிப்பு!

Advertisements

52 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு (பிரஸ் கிளப்) பல ஆண்டுகளாகத் தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால் தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கிளப்பின் பொதுக்குழுவால் அமைக்கப்பட்ட 12 பேர் கொண்ட சிறப்பு வழிகாட்டுதல் குழுவின் கோரிக்கையின் பேரில் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

Advertisements

இந்த நிலையில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த மாதம் தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், பொருளாளர், இணைச் செயலாளர் மற்றும் ஐந்து கமிட்டி உறுப்பினர்கள் பதவிகளுக்குத் தேர்தல் நடத்தப்படுவதாகப் பாரதிதாசன் அறிவித்துள்ளார்.

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தின் முதன்மை உறுப்பினர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களித்துப் போட்டியிட தகுதியுடையவர்கள். பதவிகளுக்கான வேட்புமனுக்களை நாளை முதல் டிசம்பர் 7ஆம் தேதிவரை (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிவரை தாக்கல் செய்யலாம். வேட்புமனு மீதான பரிசீலனை 9-ந்தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறும்.

10-ந்தேதி வேட்புமனுவை திரும்பப்பெறலாம். இறுதி வேட்பாளர் பட்டியல் 10-ந்தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும். 15-ந்தேதி வாக்குப்பதிவு காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறும். அதன்பிறகு வாக்குகள் எண்ணப்பட்டு அன்று மாலை 6 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும். கடைசியாக 1999-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகே இந்த ஆண்டு நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *