விஜயுடன் உரையாடியதாக கனவு கண்டேன் – நடிகர் பார்த்திபன்!

Advertisements

நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

நேற்று இரவு, நண்பர் மற்றும் இன்றைய த.வெ.க. தலைவரான விஜய் அவர்களுடன் நடந்த உரையாடல், பஜ்ஜியுடன் தேனீர் பருகுதல், வெளியில் கசியா ரகசிய அரசியல் திட்டம் அமைத்தல் போன்ற பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்தன. இதைப் பதிவு செய்ய ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ளலாமா என நினைத்தபோது…

அது கனவாகவே இருந்தது!

எப்படி இப்படியொரு பகல் கனவு இரவில் தோன்றுகிறது?

ஆனால், அது உண்மையாகவே நடந்தது.

கனவுகள் நம் நினைவுகளின் பிரதிகள் எனக் கூறப்படுகின்றன. சமீபத்தில், அவரைப் பற்றிய கேள்விகள் மற்றும் அதற்கான என் பதில்கள் மிகவும் மந்தமாக இருந்தன… இது போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *