Chennai : நங்கநல்லூரில் ஹஜ் பயணிகள் தங்கும் விடுதி.!

Advertisements

சென்னை நங்கநல்லூரில் ஹஜ் பயணிகள் தங்கும் விடுதி கட்டுவதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார்.

சவூதி அரேபியாவுக்குப் புனிதப் பயணம் செல்லும் இஸ்லாமியரின் வசதிக்காகச் சென்னை விமான நிலையத்துக்கு அருகில் ஹஜ் இல்லம் கட்டப்படும் என்று மார்ச் மாதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி சென்னை நங்கநல்லூரில் ஒரு ஏக்கர் நிலத்தில் 39 கோடியே 40 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில், 400 பேர் தங்கும் வகையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்பட உள்ளது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *