சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஹோட்டல் ஊழியர் – அதிர்ந்த சென்னை!

Advertisements

பூந்தமல்லி அருகே, சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளரைக் கத்தியால் வெட்டிய மூன்று பேரைப் போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் இளவரசு. இவர் ஓட்டலில் இருந்தபோது போதையில் வந்த மூன்று பேர் உணவு சாப்பிட்டு முடித்தபின்பு, பணம் கொடுக்க மறுத்ததால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில்,  ஆத்திரமடைந்த நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் கடையில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து விட்டு, உரிமையாளரைக் கத்தியால் வெட்டிவிட்டு, கல்லா பெட்டியில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்த ஓட்டல் உரிமையாளரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர். அதில், செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த சசிகுமார், அவரது நண்பர்கள் வில்லிவாக்கத்தை சேர்ந்த மணிகண்டன், முத்து என்பது தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்து விசாரித்ததில், குடிபோதையில் ஓட்டல் உரிமையாளரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றபோது, நூம்பல் பகுதியில் நடந்து சென்ற வட மாநில வாலிபரை வெட்டி அவரிடம் செல்போனை பறித்துள்ளனர். அதேபோல், அம்பத்தூரில் வந்த நபரைக் கத்தியால் வெட்டிவிட்டு வழிபறியில் ஈடுபட்டது தெரியவந்தது.  இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *