Advertisements

சென்னை சென்ட்ரல்-சூலூர்பேட்டை இடையே 21 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி-கவரப்பேட்டை ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால், நாளை, 28, 29 ஆகிய தேதிகளில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, நாளை காலை 10.30, 11.35 மதியம் 1.40 மற்றும் மதியம் 1, 2.30, 3.15, 3.45 மணிக்கு சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல் அதிகாலை 5.40, காலை 10.15, மதியம் 12.10, 12.35, 1,15, 3.10 நேரங்களில் சென்ட்ரல்-சூலூர்பேட்டை, சூலூர்பேட்டை-சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும் மதியம் 12.40, 2.40 மற்றும் மாலை 4.30 மணிக்கு கும்மிடிப்பூண்டி-சென்னை கடற்கரை, சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டி மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அதில் தெரிவித்துள்ளது.
Advertisements


