
தமிழக ஆட்சியாளர்களின் சமூகநீதிக் கண்களை வி.பி.சிங்-ன் ஆன்மா திறக்கட்டும் என்று, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சமூகநீதிக்கான பெருந்தலைவர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்-ன் 95-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளில் அவரது சமூகநீதிப் பார்வையையும், அதற்காக அவர் செய்த தியாகங்களையும் நினைவு கூர்ந்து அவரை வணங்குவதாக கூறினார்.
வழக்கமான ஆட்சியாளர்களுக்கும், வி.பி.சிங்-க்கும் இடையிலான வேறுபாடு இமயத்தை விட பெரிதானது என்றும், சுருக்கமாகக் கூற வேண்டுமானால், தமிழகத்தை ஆட்சி செய்பவர்கள் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சமூக நீதியை பலி கொடுப்பவர்கள்; ஆனால், பெருந்தகை வி.பி.சிங்-கோ சமூகநீதியைக் காப்பதற்காக ஆட்சியைப் பலி கொடுத்தவர்.
அதனால் தான் அவரது தியாகம் மிகப்பெரியது என்றார். மேலும், சமூகநீதி நாயகன் வி.பி.சிங்-ன் பிறந்தநாளில் அவரது ஆன்மா தமிழக ஆட்சியாளர்களின் சமூகநீதிக் கண்களை திறக்க வகை செய்யட்டும் என்று அதில் தெரிவித்துள்ளா



