Chengalpattu – Bullet Shooting Practice: சிறுவனின் தலையைத் தாக்கிய குண்டு!

Advertisements

தவறுதலாகத் துப்பாக்கியை இயக்கியபோது குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்த பயிற்சி மாணவன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு: தாம்பரம் அடுத்த முடிச்சூரில் செங்கல்பட்டு ரைபிள் கிளப் எனும் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட ஏராளமானோர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை வழக்கம்போல் மாணவர்கள் பயிற்சி மேற்கொண்டு வந்தனர்.

இதில் அதே பகுதியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவனும் பயிற்சி செய்துகொண்டிருந்தார். இந்த நிலையில் திடீரென அவர் தவறுதலாகத் துப்பாக்கியை இயக்கியுள்ளார். இதனால் அவரது பின் தலையில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் அருகில் உள்ள குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் தவறுதலாகத் துப்பாக்கியால் சுடும்போது குண்டானது திரும்பி வந்து அவரது தலையைத் தாக்கியதாகத் தெரிய வந்துள்ளது. மேலும் போலீசார் விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *