செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நொடிக்கு 500 கன அடி நீர் திறப்பு!

Advertisements

புயல் சின்னம் உருவானதன் எதிரொலியாகச் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நொடிக்கு 500 கன அடி நீர் அடையாற்றில் திறக்கப்பட்டுள்ளது.

சென்னைக்குக் குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 21 அடியாகவும், கொள்ளளவு மூவாயிரத்து 91 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. நீர்வரத்து 150 கன அடியாக இருந்தபோதும், வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னத்தால் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்குவதால் நீர் திறப்பு 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏரியில் இருந்து திறக்கப்படும் நீர் அடையாற்றில் விடப்பட்டுள்ளது. புயல் மழை ஓயும் வரை ஏரியின் நீர்மட்டத்தை 21 அடிக்குக் கீழேயே பராமரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *