Chembarambakkam Lake: வெள்ள அபாய எச்சரிக்கை!

Advertisements

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறக்கப்பட்ட நிலையில், சிறுகளத்தூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை, அடையாறு உள்ளிட்ட கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகப் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகளுக்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை நெருங்குவதால் 200 கனஅடி நீரை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி, இன்று காலைச் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 200 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது. ஏரியின் 19 கண் மதகில், 3 ஷட்டர்கள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வினாடிக்கு 25 கனஅடி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 175 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறக்கப்பட்ட நிலையில், சிறுகளத்தூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை, அடையாறு உள்ளிட்ட கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்துக்கேற்ப ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *