Chandrayaan-3 Pragyan Rover: நிலவில் ரோவர் உலா வரும் வீடியோ…

Advertisements

நிலவில் சந்திராயன்-3 விண்கலத்தின் ரோவர் பாதுகாப்பாக உலா வரும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

பெங்களூரு: நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டு உள்ள சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து சென்றது. அதிலிருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலவைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. நிலவில் சல்பர் உள்ளிட்டவை இருப்பதை கண்டறிந்து பிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில் நிலவில் சந்திராயன் 3 விண்கலத்தின் ரோவர் பாதுகாப்பாக உலா வரும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ரோவரை, விக்ரம் லேண்டர் குழந்தையைப் போல் கண்காணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள பதிவில், “பாதுகாப்பான பாதையைத் தேடி ரோவர் சுழற்றப்பட்டது. இந்தச் சுழற்சி லேண்டர் இமேஜர் கேமரா மூலம் படம்பிடிக்கப்பட்டது. சந்தா மாமாவின் முற்றத்தில் ஒரு குழந்தை விளையாட்டுத்தனமாக உல்லாசமாக இருப்பதை, தாய் பாசத்துடன் பார்ப்பது போன்ற உணர்வு. இல்லையா?” என்று தெரிவித்து உள்ளது.

 Chandrayaan-3 Pragyan Rover
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *