Tamannaah Bhatia: மாலத்தீவில் ஓய்வெடுக்கும் ஜெயிலர் பட நடிகை.!

Advertisements

Tamannaah Bhatia: நடிகை தமன்னா தற்பொழுது ஓய்வெடுப்பதற்காக மாலத்தீவுகளுக்கு சென்றுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்பொழுது வைரலாக உள்ளது.

பிரபல நடிகை தமன்னா இறுதியாகச் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி மீண்டும் தனது புகழை உச்சிக்குக் கொண்டு சென்றார் என்றால் அது மிகையல்ல.

அந்த அளவுக்குக் காவாலா பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து இவர் வெளிநாட்டுக்கு புறப்பட்டார்.

அதே சமயம் தற்போது இவர் டேட்டிங் செய்து வருவதாகக் கூறப்படும், தமன்னாவின் நண்பரும், சக நடிகருமான விஜய் வர்மாவும் அதே விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டிற்கு புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த இளம் ஜோடிகள் இருவரும் ஒரே இடத்திற்கு தான் தங்களது இன்ப சுற்றுலாவை அனுபவிக்க செல்கிறார்கள் என்று தகவல்கள் வெளியான நிலையில் தற்போது தமன்னா மாலத்தீவில் தனது நேரத்தைச் செலவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாலத்தீவில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத் தமன்னா தற்பொழுது வெளியிட்டுள்ளார்.இதைப் பார்த்த நடிகை ராசி கண்ணா அவர்கள் தனது அன்பை வெளிப்படுத்திய நிலையில் ரசிகர்கள் பலரும் தமன்னாவின் அந்த இன்ஸ்டாகிராம் பதிவிற்கு தங்களது லைக்குகளை குவித்து வருகின்றனர்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *