இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

இன்று தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாகத் தீவிரமடைந்து வருவதால் கடந்த 3 நாட்களாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

சென்னையிலும், சென்னை புறநகர் பகுதிகளிலும் தினமும் இரவு நேரத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதற்கிடையே இன்று 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி இன்று சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *