Bigg Boss Tamil 7: பவா செல்லதுரை வெளியேறியுள்ளார்!

Advertisements

மன உளைச்சல் மற்றும் உடல்நல பாதிப்பு காரணமாகப் பிக்பாஸ் வீட்டிலிருந்து பவா செல்லதுரை வெளியேறியுள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 கடந்த வாரம் கோலாகலமாகத் தொடங்கப்பட்டது. திரை நடிகர்கள், யூடியூப் பிரபலங்கள், என முதல் நாள் 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்தார்கள். அவர்களின் ஒருவர் தான் சிறந்த எழுத்தாளரும், நடிகரும், கதைசொல்லியுமான பவா செல்லதுரை.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட போதே ஏராளமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. எனினும், பிக் பாஸ் வீட்டுக்குள் சக போட்டியாளர்களுடன் சகஜமாகப் பழகி வந்தார் பவா செல்லதுரை. முதல் வாரமே ஸ்மால் பாஸ் வீட்டுக்குள் அனுப்பட்ட ஆறு போட்டியாளர்களின் ஒருவராக இருந்த பாவ செல்லதுரை தற்போது இரண்டாவது வாரமும் ஸ்மால் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் பிரதீப் ஆண்டனி – பவா செல்லதுரை இடையே எச்சில் துப்பிய விவகாரம் சர்ச்சையானது. அதைத் தொடர்ந்து விசித்திரா – ஜோவிகா இடையே ஏற்பட்ட அடிப்படை கல்வி விவாதத்தில் ஜோவிகாவுக்கு அதரவாகப் பவா செல்லதுரை பேசினார்.  இதற்கிடையே முதல் வாரத்தில் அனன்யா எவிக்‌ஷனாகி வெளியேற்றப்பட்டார்.

அதைத் தொடர்ந்து இந்த வாரக் கேப்டனாகப் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான சரவணா விக்ரம் தேர்ந்து எடுக்கப்பட்டார். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் முடிவுக்குப் பவா செல்லதுரை வந்துள்ளார். மிகுந்த மன உளைச்சலில் இருந்த பவா செல்லதுரை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது என முடிவெடுத்து பிக் பாஸிடம் பேசியுள்ளார்.

அதில், “ பிக்பாஸ் வீட்டிற்குள் மற்றவர்களைக் கீழ்மை படுத்துவது, வன்மத்துடன் பழகுவது எனச் சில விஷயங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனக்கு ஹவுஸ்மேட்ஸ் உடன் பர்சனலாக எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. என்னுடைய உடல் அளவிலும் மனதளவிலும் சற்று பாதிக்கப்பட்டதாக உணர்கிறேன். அதனால் என்னை இங்கிருந்து உடனே அனுப்பி விடுங்கள்” எனக் கேட்டுள்ளார்.

பிக் பாஸ் கொஞ்சம் யோசியுங்கள், மருத்துவர் ஒருவரை அனுப்பி வைக்கிறேன் எனச் சொல்லியும் கேட்காத பவா போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார். இந்த நிலையில் அனன்யா, பவா செல்லதுரை இல்லாமல் பிக்பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்கள் உள்ளனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *