Car Accident: தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதி 6 பேர் பலி!

எதிர்பாராதவிதமாகச் சாலையோரம் நின்ற லாரியின் பின்புறத்தில் கார் பயங்கர வேகத்தில் மோதியது.

தெலங்கானா மாநிலம் கொடடா பகுதியில் சாலையோரம் பழுதாகி சாலையோரம் நின்ற லாரி மீது இன்று காலை கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர், இருவர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து தொடர்பாக கொடடா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து, கொடடா துணைக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதர் ரெட்டி கூறியாதாவது, “10 பேர் கொண்ட கார் ஹைதராபாத் – விஜயவாடா நெடுஞ்சாலையில் சென்றுள்ளது. கார் கொடடா பகுதியில் சென்ற பொழுது, அப்பகுதியில் பழுதுபார்ப்பதற்காக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் கார் மோதியுள்ளது.

இதில், காரில் பயணம் செய்தவர்களில் ஆறு பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொடடா போலீசார் படுகாயமடைந்த 4 பேரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *