கனடாவில் பெரும் சோகம்..!

கனடாவில் பள்ளியிலும் வீட்டிலும் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர்.

கனடாவின் மேற்குப் பகுதியில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் டம்ப்ளர் ரிட்ஜ் பள்ளியில் துப்பாக்கி ஏந்திய ஒருவர் சரமாரியாகச் சுட்டதில் ஆறு பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். ஏழாவது ஆள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.

பள்ளியில் கண்டெடுக்கப்பட்ட உடல்களில் ஒன்று இந்தத் துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியவர் என்றும், அவர் பள்ளியில் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு இறுதியில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தன்னுயிரை மாய்த்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே பள்ளிக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பள்ளியில் துப்பாக்கியால் சுட்டவர் அதற்கு முன் இந்த வீட்டிலும் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதாகக் கருதப்படுகிறது.துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தபோது தங்கள் வகுப்பறையின் கதவுகளைச் சாத்திக்கொண்டதாகவும், மேசை, பெஞ்சுகள் ஆகியவற்றைக் கதவுக்குப் பின்னால் தடுப்பாக வைத்ததாகவும் அந்தப் பள்ளியின் மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி இது இது மிகப் பயங்கரமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *