
அணைக்கட்டில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இடையூராக வந்த 108 ஆம்புலன்ஸ் எச்சரிக்கை விடுத்து பேசியுள்ளார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரை புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன் மற்றும் கட்சியினர் வரவேற்றனர்.
இந்நிலையில், இரவு அணைக்கட்டு எம்.ஜி.ஆர். சிலை அருகே ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசத் தொடங்கியபோது 108 ஆம்புலன்ஸ் ஒன்று அங்கு வந்துள்ளது.
இதை பார்த்து, கோபமடைந்த அவர், தி.மு.க. அரசு வேண்டும் என்றே ஒவ்வொரு கூட்டத்திலும் இது போன்ற நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ்களை விட்டு இடையூறு செய்வதாகத் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர், நேருக்கு நேர் மோத திராணி தெம்பு இல்லாத தி.மு.க. அரசு வேண்டுமென்றே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுவருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தான் பேசிய முப்பது கூட்டங்களிலும் ஆம்புலன்ஸ்களை இடையூறாக விட்டு உள்ளனர் என்று தெரிவித்தார். இதுகுறித்து காவல் துறையில் நிர்வாகிகள் புகார் அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.


