
புதுடெல்லி:
டெல்லியில் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜனதா, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
70 தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
டெல்லியில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளது.
பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
மாநிலத்தில் கடந்த சில வாரங்களாகத் தீவிர பிரசாரம் நடந்து வருகிறது.
கட்சிகள் அனைத்தும் ஒன்றின் மீது மற்றொன்று வைக்கும் குற்றச்சாட்டுகளால் பிரசார கூட்டங்களில் அனல் பறக்கிறது.
இந்தப் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
எனவே தலைநகர் முழுவதும் இறுதிக்கட்ட பிரசாரம் வேகமெடுத்து உள்ளது.
பா.ஜனதா, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் மாநிலத்தில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
