
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக, 64 வயதான சனே டக்காய்ஷி தேர்வாகி உள்ளார் . இவர்,பிரபலமான டிரம்ஸ் இசைக்கலைஞர். ஜப்பான் நாட்டில LDP னு சொல்லப்படுகிற லிபரல் டெமாக்ரடிக் கட்சி ஆட்சியில் உள்ளது.
இக்கட்சியின் தலைவரும் ஜப்பான் பிரதமருமான ஷிகெரு இஷிபா, ஓராண்டுக்குப் பிறகு பதவி விலகுவதாக அறிவித்திருந்தார்.ஆனால் ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை இழந்ததால் ,வேறு வழியில்லாம ஷிகேரு தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
அதனால், ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் டோக்கியோவில் நடைபெற்றது. இதில் முன்னாள் பொருளாதார பாதுகாப்பு அமைச்சர் சனே டகைச்சி (64), வேளாண் அமைச்சர் ஷிஞ்சிரோ கொய்சுமி ஆகியோர் போட்டியிட்டனர்.
முதல் கட்டமாக கட்சிக்குள் நடைபெற்ற வாக்கெடுப்பில் சனே டகைச்சி வெற்றி பெற்றார். உட்கட்சி தேர்தலில் சனே 183 வாக்குகளும் கொய்சுமி 164 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து லிபரல் ஜனநாயகக் கட்சித் தலைவராக சனே டகைச்சி அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்று கொண்டார். அவர் ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக சொல்லப்பபடுகிறது .
பார்லிமென்டில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாதது, ஊழல் மோசடிகளால் ஆளும் கட்சி மீது அதிருப்தியில் உள்ள பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவது, பணவீக்கம், விலைவாசி உயர்வு என, பிரதமராக பதவியேற்கும் டக்காய்ஷிக்கு ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன.
டிரம்ப் விதித்த வரியும் ஜப்பானை நெருக்கடியில் தள்ளியிருப்பதால, இதையெல்லாம் சனே எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது . லிபரல் டெமாக்ரடிக் கட்சி என்பது ஜப்பானின் பழமைவாத காட்சிகளில் ஒன்று.இப்படிப்பட்ட கட்சிக்குள்ள இருந்து பெண் ஒருவர் முதன்முதலாக ஒரு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஒரு வரலாற்று சாதனையாக பார்க்கப்படுது.
ஆனால் அதே சமயம் சனே டகாய்ஷி பழமைவாத கொள்கைகளைக் கடைபிடிப்பவர்.ஜப்பான் சர்வதேச அளவில் பாலின சமத்துவத்தில் பின் தங்கிய நாடுகளில் ஒன்று. கடந்த காலங்களில் பெண்களின் நலனுக்காக,கொண்டுவரப்பட்ட அனைத்து சீர்திருத்தங்களையும் எதிர்த்திருக்கிறார் சனே.
உதாரணமாக திருமணமான பெண்கள் தங்கள் குடும்ப பெயரை மாற்றாமல் இருப்பதற்கான முன்மொழிவை எதிர்த்தார். கணவனுக்கும் மனைவிக்கும் ஒரே குடும்ப பெயர் இல்லாமல் இருப்பது குடும்பத்தை சிதைத்துவிடும் என்றார்.
அரச குடும்பங்களில் பெண்களை வாரிசாக ஏற்கும் சட்டத்தை எதிர்த்தார். குடும்பங்கள்தான் சமூகத்தின் அலகு எனக் கூறும் அவர், பெண்களின் உரிமைக்கான பல திட்டங்களை குடும்பத்தை சிதைக்கும் எனக் கூறி எதிர்த்திருக்கிறார்.
சமூகத்தில் பெண்கள் நல்ல மனைவிகளாகவும் சிறந்த தாய்மார்களாகவும் இருப்பதே போதுமானது என்று லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் நிலைப்பாட்டை ஆதரிப்பவர் சனே. மேலும் ஓர்பாலின உறவுகளையும் திருமணத்தையும் எதிர்த்து வருகிறார்.
இப்படியிருக்க ஒரு பெண் ஜாப்பான் நாட்டை வழிநடத்தும் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவது சாதனையாக தெரிந்தாலும் ஜப்பானில் உள்ள பெண்களுக்கு இது எதிராகவும் ஆபத்தாகவும் அமையுமோ என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.



