Mudumalai Tiger Reserve: சாலையோரம் ஜாலியாக ஓய்வு எடுத்த புலி!

நீலகிரி மாவட்டம் சிங்கார வனப்பகுதியில் புலி ஒன்று ஜாலியாக ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த வீடியோ வைரல் கி வருகிறது…

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. இந்த வனப் பகுதியில் யானை, புலி, மான், சிறுத்தை, கரடி, கட்டெருமை உள்ளிட ஏராளமான வன விலங்குகள் மற்றும் அரிய வகை பறவைகளின் வசிப்பிடமாகத் திகழ்ந்து வருகிறது.

தமிழ்நாட்டிலேயே புலிகள் அதிக எண்ணிக்கையில் காணப்படும் பகுதியாக உள்ளதால் முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள கிராமப் பகுதிகள் மற்றும் சாலைகளின் அருகே புலிகளின் நடமாட்டம் இருக்கும். இதனிடையே முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வெளி மண்டல வனப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதி நடுவே அமைந்துள்ள மசினகுடியிலிருந்து சிங்கார செல்லும் சாலையோரம் உள்ள வனப்பகுதியில் புலி ஒன்று ஜாலியாக ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தது.

அப்போது அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் இருந்தபடி புலியைக் கண்டு ரசித்தோடு மட்டுமல்லாமல் வீடியோ புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். இதனிடையே வனப்பகுதியில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த புலி பின்னர் மெதுவாக மீண்டும் அடர்ந்த வன பகுதிக்குள் சென்று மறைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *