C. P. Radhakrishnan: எட்டுவழிச் சாலைத் திட்டம் கொண்டுவரப்படும்!

Advertisements

சேலம் – சென்னை இடையேயான எட்டுவழிச் சாலைத் திட்டம் மீண்டும் வரும் என ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று சேலம் சென்றிருந்தார். அங்குள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆன்மிகம் மட்டும்தான் தனி நபர் ஒழுக்கத்தை, பொதுவாழ்வில் எதையும் எதிர்பாராமல் கடைக்கோடியில் இருக்கும் மனிதருக்கும் உதவும் எண்ணத்தை வளர்க்கும்.

சேலம் மாநகரின் மகத்தான பாக்கியம் கோட்டை மாரியம்மனின் பலம்தான். காலத்தைக் கடந்து சேலம் வெற்றிகரமான நகரமாக மாநகரமாக உயர்ந்து நிற்கிறது. எட்டுவழிச் சாலைத் திட்டம் மீண்டும் வரும். சேலம் நகரம் சென்னைக்கு நிகராக, பெங்களூருக்கு நிகரானதாக மாற வேண்டுமென்று மாரியம்மனை வேண்டுகிறேன்.” என்றார்.

உதயநிதியால் சனாதனத்தை ஒழிக்க முடியாது எனவும், அதனை ஒழிக்க வேண்டும் என்றால் முதலில் காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும் எனவும் அவர் கூறினார். மேலும், “அரசியல் சாசனத்துக்கு மாறாக எந்தச் சட்டம் இயற்றப்பட்டாலும், அதைக் கிடப்பில் போட வேண்டியதும், உச்ச நீதிமன்றத்தின் கருத்தைக் கேட்பதும், அட்டர்னி ஜெனரல் கருத்தைக் கேட்பதும் ஆளுநரின் கடமை.” எனவும் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஆளுநருக்குக் கொடுக்கும் சம்பளம் நாங்கள் கொடுக்கும் பிச்சை என்கிறார்கள். அப்படியானால், நீங்கள் வாங்கும் சம்பளம் யார் போட்ட பிச்சை. அனைவருக்கும் மக்கள்தான் எஜமானர்கள். மக்களின் வரிப்பணத்தில்தான் அனைவருக்கும் சம்பளம் கிடைக்கிறது என்பதை திமுக அமைச்சர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *