Dubai: விமானத்தில் திருமணம் செய்த இந்தியஜோடி!

Advertisements

காற்றில் பறந்தபோது கல்யாணம்.. துபாய் போயிங் விமானத்தில் திருமணம் செய்த சம்பவம் வைரலாகி வருகிறது.

இந்திய தொழிலதிபர் திலிப் போப்லேவின் மகள் திருமணம் துபாயிலிருந்து ஓமன் நாட்டிற்கு செல்லும் போயிங் விமானத்தில் நடந்தது. திலிப் போப்லெ மகள் விதி போப்லேவுக்கும், ஹ்ரிதேஷ் சைனானிக்கும்  திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் தனது மகளின் திருமணத்தை நாடே வியக்கும் வண்ணம் விமரிசையாக வித்தியாசமாக நடத்த ஆசைப்பட்ட தந்தையான திலிப் போப்லே போயிங் 747 விமானத்தில் நடத்த திட்டமிட்டார்.

போயிங் 747 விமானம் திருமண  வரவேற்பு அரங்கமாக மாறியது. இந்திய மணமகள் விதி போப்பேலேவுக்கும், ஹ்ரிதேஷ் சைனானிக்கும் போயிங் விமானத்தில் நடந்த திருமணம்  மக்களை வெகுவாகக் கவர்ந்தது. போயிங் விமானம் 747 திருமண வரவேற்பு அரங்கமாக  மாற்றப்பட்டது.

300 விருந்தினர்களுடன் , துபாயிலிருந்து ஓமன் நாட்டிற்கு செல்லும் விமானமே திருமண விழாவிற்காக அலங்கரிக்கப்பட்டு தடபுடலாகத் திருமணம்  நடந்தது. ஆயிரம் மைல்களுக்கு மேலே பறந்த விமானத்தில், மணமகள் கோலத்தில்  மணமகள் வந்தார்.

மணமகன் சிவப்பு நிற ஃபெராரி  காரில் விமான நிலையத்தில் கோட் சூட் அணிந்து மணமகளான விதியை வரவேற்க   வந்திருந்தார். தனியார் விமான நிலையமான ஜெடெக்ஸ் துபாய்  விமான நிலையத்திலிருந்து வந்து ஓமனில் தரையிறங்கியது.

மூன்று மணி நேர விமான பயணம், விருந்தினர்களுக்கு செவென் ஸ்டார் ஓட்டல் விருந்து வழங்கப்பட்டது. திருமண வரவேற்பின்போது விருந்தினர்களின் வசதிக்காக இருக்கைகள் மாற்றப்பட்டு திருமண வைபவத்தை கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆகாயத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியானது, 30 வருடங்களுக்கு முன் 1994-ல் திலிப் போப்லேவுக்கு நடந்தது. அதற்குப் பிறக்கு 30 வருடங்களுக்குப் பிறகு திலிப் போப்லேவின் மகள்  விதி போப்லேவிற்கு நடந்தது. தந்தை திலிப் போப்லே, அரபு அமீரகத்தின் பிரபல தொழிலதிபர். திலிப் போப்லே  ஏர் இந்தியா ஏர் பஸ் A310 விமானத்தில் 1994-ல் சுனிதாவை மணந்தார்.

தற்போது அவரது மகள் விதி போப்லேவுக்கும் அதே போல் திருமணம் நடந்துள்ளது. மேலும் திலிப் போப்லே கூறும்போது எனது மகன் திருமணம் விண்வெளியில் நடந்தாலும் நடக்கலாம் என்கிறார். மும்பை மற்றும் துபாயில் பிரபல நகைக் கடை தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *