
போனி கபூரை திருமணம் செய்துகொள்ளும் முன்னரே நடிகை ஸ்ரீதேவி கர்ப்பமாக இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில் அதுகுறித்து போனி கபூரே விளக்கம் அளித்துள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் போனி கபூர், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான இவருக்கு முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. 1983-ம் ஆண்டு மோனா என்பவரைத் திருமணம் செய்துகொண்ட போனி கபூர் அவருடன் 13 ஆண்டுகள் வாழ்ந்தார். இந்த ஜோடிக்கு அர்ஜுன் கபூர் என்கிற மகனும் உள்ளார். இவர் தற்போது பாலிவுட்டில் ஹீரோவாக நடித்து வருகிறார். மோனாவை பிரிந்த பின்னர் ஸ்ரீதேவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

போனி கபூர் – ஸ்ரீதேவி இருவரும் கல்யாணத்திற்கு முன்னதாகவே உறவில் இருந்ததாகவும், இதனால் திருமணத்துக்கு முன்னரே ஸ்ரீதேவி கர்ப்பமானதாகவும் பல வருடங்களாகக் கிசுகிசுக்கள் உலா வந்த உள்ளன. ஆனால் இதுகுறித்து ஸ்ரீதேவி விளக்கம் அளித்ததில்லை. அதேபோல் இந்த விவகாரத்தில் மெளனம் காத்து வந்த போனி கபூர், சமீபத்திய பேட்டியில், அதிரடி விளக்கம் அளித்து அந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
அவர் கூறியதாவது : “முதல் மனைவி மோனாவை விவாகரத்து செய்யும் முன்பே ஸ்ரீதேவியை காதலித்தேன். அது மோனாவுக்கும் தெரியும். ஸ்ரீதேவி கர்ப்பமாகும் முன்னரே நாங்கள் ரகசிய திருமணம் செய்துகொண்டோம். கடந்த 1996-ம் ஜூன் மாதம் 2ம் தேதியே ஸ்ரீதேவியும் நானும் ஷீரடியில் வைத்து ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டோம். இதையடுத்து 1997-ம் ஆண்டு ஜனவரி மாதம் தான் ஸ்ரீதேவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதற்கு மேல் இதனை மறைக்க முடியாது என முடிவெடுத்து தான் அனைவர் முன்னிலையிலும் அந்த மாதமே திருமணம் செய்துகொண்டோம். ஆனால் இன்னும் சிலர் ஸ்ரீதேவி திருமணத்துக்கு முன்பே கருவுற்றதாம கூறி வருகின்றனர். என்னுடைய பலம், உயிர்நாடி எல்லாமே ஸ்ரீதேவி தான். என்னுடைய மகள்களின் வெற்றியை அவள் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன் ஆனால் இவ்வளவு சீக்கிரமே அவள் உயிரிழந்தது துரதிர்ஷ்டமானது. அவளுடைய எல்லா கனவுகளையும் நிறைவேற்ற நான் முயற்சி செய்வேன்” எனப் போனி கபூர் அந்தப் பேட்டியில் கூறி உள்ளார்.



