BJP Party Ponneri: குப்பை அள்ளும் வாகனத்தில் ராமர் படங்கள்.. பாஜக போராட்டம்!

Advertisements

ராமர் பேனர்கள் குப்பை அள்ளும் வாகனத்தில் போடப்பட்டதை கண்டித்து பிஜேபி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சனையாக இந்திய முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பிஜேபி கட்சியினர் ராமர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததை பொன்னேரி நகராட்சியினர் அகற்றி குப்பைத்தொட்டி வாகனங்களில் போடப்பட்டதை கண்டித்து பொன்னேரி நகராட்சி ஆணையர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் பொன்னேரி நகராட்சி அலுவலகம் முன்பு பிஜேபியினர் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பொன்னேரி நகராட்சியில் மிக்ஸாம் புயலில் இருந்து அரசு பேனர்கள் வைக்க கூடாது என ஆணை பிறப்பித்ததாகவும் பேனர்கள் வைக்கப்படவில்லை எனவும் முறையாக அனுமதி பெற்று பேனர்கள் வைக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

பொன்னேரி நகராட்சியின துணைத் தலைவர் விஜயகுமார் நிகழ்விடத்திற்கு வந்து தங்கள் நகராட்சியை தங்களிடம் இரண்டு பேட்டரி வாகனங்கள் குப்பையள்ளுவதற்காகவே உள்ளதாகவும் வேறு வாகனங்கள் இல்லாத நிலையில் ஆதலால் இந்த பேனர்களை அப்புறப்படுத்தி போட்டிருக்கலாம் எனவும் அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

இந்நிலையில் பேனர்களை அகற்றி குப்பை அல்லும் வாகனங்களில் போட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை தற்காலிகமாக பணியிடம் நீக்கம் செய்வோம் என உறுதி அளித்ததை அடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *