Sexual Harrasment: பாஜக பிரமுகர் கைது!

Advertisements

பெண் மருத்துவருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகப் பாஜக பிரமுகர் நாஞ்சில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.2022-ல் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளரிடம் பண மோசடியில் ஈடுபட்டது உட்பட ஜெயக்குமார் மீது 10க்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

குமரி: குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பெண் மருத்துவருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகப் பாஜக பிரமுகர் நாஞ்சில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவிலை அடுத்த பார்வதிபுரத்தில் வசித்து வருபவர் பாஜக பிரமுகர் நாஞ்சில் ஜெயக்குமார். இவர் நாகர்கோவில் அருகே கோட்டார் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்.

பின்னர், சிகிச்சை அளித்த பெண் மருத்துவருக்குப் பாலியல் ரீதியாகப் பாஜக பிரமுகர் நாஞ்சில் ஜெயக்குமார் தொல்லை அளித்துள்ளார். மேலும் செல்போன் மூலமாகவும் நாளுக்கு நாள் தொல்லை அதிகரித்ததால் பெண் மருத்துவர், நாஞ்சில் ஜெயக்குமார் மீது போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

மருத்துவரின் புகாரின் பேரில் பாஜக பிரமுகர் நாஞ்சில் ஜெயக்குமார் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து போலீஸ் கைது செய்தது. 2022-ல் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளரிடம் பண மோசடியில் ஈடுபட்டது உட்பட ஜெயக்குமார் மீது 10க்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதே ஆண்டுக் குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், நீண்ட நாட்கள் சிறையில் இருந்துள்ளார்.

பல்வேறு அரசியல் கட்சிகளில் செயல்பட்ட இவர், சமீபத்தில் பாஜகவில் இணைந்து பாஜக பிரமுகராக வலம்வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் தான், பெண் மருத்துவருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகப் பாஜக பிரமுகர் நாஞ்சில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *