
நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சியாளர் திரு.ஆல்பர்ட் ஸென்ட் ஜியார்ஜி அவர்கள் பிறந்ததினம்…
வைட்டமின் சி-யை கண்டுபிடித்தவரும் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஹங்கேரி ஆராய்ச்சியாளருமான ஆல்பர்ட் ஸென்ட் ஜியார்ஜி 1893ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் பிறந்தார்.
செல்கள், வைட்டமின் சி, அஸ்கார்பிக் அமிலத்தின் வேதியியல் மாற்றங்கள்குறித்த கண்டுபிடிப்புகளுக்காக 1937-ல் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
கேமரான் பரிசு, லாஸ்கல் விருது உட்பட பல விருதுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார். இறுதிவரை மனிதகுல நல்வாழ்வுக்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட ஆல்பர்ட் ஸென்ட் ஜியார்ஜி தனது 93-வது வயதில் 1986 அக்டோபர் 22 ஆம் தேதி அன்று மறைந்தார்.

