Madurai : சென்னை சென்ட்ரலிலிருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டு விபத்து!

Advertisements

சென்னை சென்ட்ரலிலிருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டு விபத்து!

மதுரை ரயில்நிலையம் அருகே சென்னை சென்ட்ரலிலிருந்து போடி சென்ற பயணிகள் ரயில் இன்று காலைத் திடீரெனத் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. ரயில் இன்ஜினுக்கு அடுத்த பெட்டியின் சக்கரம் கழன்று தடம் புரண்டதால் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. இதனால், தீபாவளியைக் கொண்டாட, சொந்த ஊர்களுக்குச் சென்று கொண்டிருந்த பயணிகள் பீதியடைந்தனர்.

பின்னர், ரயில் விபத்துகுறித்து தகவலறிந்த ரயில்வே பணியாளர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தடம் புரண்ட ரயில் பெட்டியைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *