மிகப்பெரிய ஊழல்வாதிகள்- பிரதமர் மோடி !

Advertisements

மும்பை:

“மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சியினர் மிகப்பெரிய ஊழல்வாதிகள்” எனப் பிரதமர் மோடி கடுமையாகச் சாடியுள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம், சந்திரபூர் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது,  விவசாயிகளுக்கு நெருக்கடியைச் சமாளிக்க உதவும் வகையில் எங்கள் அரசு அவர்களுக்கு நிதியுதவி அளிக்கிறது. எங்கள் தேர்தல் வாக்குறுதி மாநில வளர்ச்சிக்கு உத்தரவாதமாக இருக்கும். சுதந்திரத்திற்குப் பிறகு, தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிவாசிகள் முன்னேறக் காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்கவில்லை.

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் கொண்டு வரக் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் விரும்புகிறது. சமூகத்தைப் பிளவுபடுத்த காங்கிரஸ் விரும்புகிறது. நாடு செழிக்க மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சியினர் மிகப்பெரிய ஊழல்வாதிகள்.

மாநில வளர்ச்சிக்கு மகா விகாஸ் அகாடி கட்சியினர் தடையாக இருக்கிறார்கள். பா.ஜ., அரசு மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. கடந்த 2.5 ஆண்டுகளில் இரட்டிப்பு வேகத்தில் வளர்ச்சியைப் பார்த்து இருப்பீர்கள் என்று பிரதமர் மோடி பேசினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *