Japan:’தினமும் கட்டாயம் சிரிங்க..” : பிரபல நாடு உத்தரவு!

Advertisements

டோக்கியோ: இதய நோய் உள்ளிட்ட பிரச்னைகளிலிருந்து சிரிப்பு பாதுகாக்கிறது என்ற ஆய்வின் அடிப்படையில் ஜப்பானின் யமகட்டா மாகாணத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்தின் 8வது நாளைச் சிரிப்பு தினமாக மக்கள் கடைப்பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சிரிப்பு என்பது நம் ஆரோக்கியத்திற்கு நல்லது எனப் பலரும் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். அதுபற்றி ஜப்பானின் யமகட்டா பல்கலையில் சிரிப்பதால் ஏற்படும் நன்மைகள்பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் இதய நோய் அபாயத்தைக் குறைக்க சிரிப்பு உதவுவதை உறுதிப்படுத்தியது. அதன்படி, யமகட்டா மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு புதிய உத்தரவைக் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதாவது, ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிரிப்பதை கட்டாயமாக்கி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாதத்தின் 8வது நாளை, சிரிப்பு தினமாக மக்கள் கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தினமும் சிரித்தால் மன அழுத்தம், பதற்றம் குறைந்து ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், இந்த உத்தரவு தனிப்பட்ட சுதந்திரத்தை பாதிக்கும் என்றும், நோய் அல்லது வேறு காரணங்களால் சிரிக்க முடியாதவர்களின் உரிமைகளை இந்த உத்தரவு மீறுவதாகவும் அங்குள்ள சில அரசியல்வாதிகள் விமர்சித்துள்ளனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *