Cricket World Cup: ஆஃப்கானிஸ்தான் அணி அபார வெற்றி!

Advertisements

ஆஃப்கானிஸ்தான் அணி அபார வெற்றி!

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை கடந்த 5ம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும், 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் தற்போது வரை 21 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் இந்தியா, நியூசிலாந்து,  தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையே முதல் 4 இடங்களை ஆக்கிரமித்துள்ளன.

இந்நிலையில், இன்று நடைபெறும் லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ள பாகிஸ்தான்,  கடைசி இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது.சென்னையில் நடைபெற்ற  ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.இதையடுத்து ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராகப் பாகிஸ்தான் அணி முதல்  இன்னிங்ஸை அப்துல்லா மற்றும் இமாம் உல்-ஹக் தொடங்கினர்.

38 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் சேர்த்து நிதானமாக விளையாடினர். கடைசியாகப் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் சேர்த்தது. அதனைத் தொடர்ந்து 283ரன்களை எடுத்தால் வெற்றியென விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள் தொடக்கம் முதலே நிதானமாக விளையாடினர்.இதையடுத்து அடுத்து அடுத்து  விக்கெட்டுகளை இழந்தாலும் கடைசியாக ஆஃப்கானிஸ்தான் அணி 49   ஓவர்கள் முடிவில்  2 விக்கெட்டுகளை இழந்து 286  ரன்கள் சேர்த்து வெற்றிபெற்றது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *