Bigg Boss Tamil Season 7: ரசிகர்கள் ஷாக்!

Advertisements

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்று வரும் டிக்கெட் டூப்பினாலே டாஸ்க்கிலிருந்து விஷ்ணு மற்றும் மணி எலிமினேட் செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது 85 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இந்த வாரம் முழுக்க டிக்கெட் டூப்பினாலே டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இந்த டாஸ்க்கில் அர்ச்சனா மற்றும் விஜய் வர்மா ஆகியோர் கலந்துகொள்ளும் தகுதியை இழந்ததால் எஞ்சியுள்ள 8 போட்டியாளர்களுக்கு இடையே இந்த டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது.

டிக்கெட் டூப்பினாலே டாஸ்க்கில் நேற்று நடைபெற்ற முயல் டாஸ்க்கில் ரவீனா முதலில் எலிமினேட் ஆனார். இதற்கு அடுத்த சுற்றில் விசித்ரா மற்றும் தினேஷ் ஆகியோர் வெளியேறினர். பின்னர் பூர்ணிமா மற்றும் நிக்சனை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கினார் விஷ்ணு. இதையடுத்து மாயா, மணி மற்றும் விஷ்ணு ஆகியோரு மோதிய இறுதி சுற்றில் மணியின் மாஸ்டர் பிளான் காரணாம மாயா அவுட் ஆனார். இதனால் அவருக்கு மூன்றாவது இடம் கிடைத்தது. அதிக முயல்களைக் கொண்டவர்கள் என்கிற அடிப்படையில் மணிக்கு இரண்டாம் இடமும், விஷ்ணுவுக்கு மூன்றாம் இடமும் கிடைத்தது.

இந்த நிலையில், இன்று டிக்கெட் டூப்பினாலேவின் இரண்டாவது டாஸ்க் நடத்தப்பட்டு உள்ளது. ஆக்டிவிட்டி ஏரியாவில் நடத்தப்பட்ட இந்த டாஸ்க்கிற்கு முயல் மேக்ஸ் எனப் பெயரிடப்பட்டு உள்ளது. போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கும் கார்டில் இருக்கும் தகவல்கள் அடிப்படையில் போட்டியாளர்கள் விளையாடி முன்னேறிச் சென்று முயல்களை எடுப்பதே இந்த டாஸ்க்கின் ரூல்ஸ் ஆக இருந்தது. இந்த டாஸ்க்கில் ரவீனா கையில் யாரையாவது எலிமிமேட் செய்யும் பவர் உடன் கூடிய கார்டு கிடைக்கிறது.

அந்தக் கார்டை வாங்கியதும் மாயா அல்லது பூர்ணிமாவை ரவீனா எலிமினேட் செய்வாரென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் யாரும் எதிர்பாராத வகையில் விஷ்ணுவை எலிமினேட் செய்வதாகக் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதையடுத்து மணி மற்றும் ரவீனா அடுத்தடுத்து எலிமினேட் ஆக எஞ்சியுள்ள தினேஷ், விசித்ரா, நிக்சன், பூர்ணிமா, மாயா, ஆகிய 5 பேருக்கு இடையே தான் போட்டி நடந்துள்ளது. இதில் பூர்ணிமா தான் லீடிங்கில் இருப்பதால் அவர் தான் இந்த டாஸ்க்கில் வெற்றிபெறுவார் போலத் தெரிகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *