Bigg Boss Tamil 7: பிரதீப், நிக்ஸன் இடையே வெடித்த மோதல்!

பாடி காட்டு, ஆடிக் காட்டலாம். பிரதீப், நிக்ஸன் இடையே வெடித்த மோதல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில்   முதல் ப்ரோமோவிலேயே, பிரதீப் மற்றும் நிக்ஸன் இடையே வெடித்த மோதல்குறித்த காட்சிதான் வெளியாகி உள்ளது.

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் துவங்கிய நிலையில், முதல் வாரத்திலேயே நாமினேஷன் படலம் துவங்கியது. முதல் போட்டியாளராக அனன்யா ராவ் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து, பவா செல்லதுரை தன்னுடைய உடல் நலனைக் காரணம் காட்டி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவதாகக் கூறினார். பின்னர் பிக் பாஸ் தரப்பிலிருந்து இவரிடம் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், கடைசியில் உடல்நிலை காரணமாக அவரை வெளியேற்றுவதாகப் பிக் பாஸும் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது 16 போட்டியாளர்கள் முட்டி மோதிக் கொண்டு தங்களுடைய விளையாட்டை வெளிப்படுத்தி, ரசிகர்களைத் கவர முயற்சித்து வருகின்றனர். குறிப்பாகக் கடந்த ஆறு சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்தச் சீசனில் பல பிரச்சனைகள் அடுத்தடுத்து வெடித்து வருகிறது.  ஒரு வீடாக இருக்கும் போதே பிக் பாஸ் வீட்டில் பல பிரச்சினைகள் ஏற்படும் நிலையில்,  இரண்டு வீடு என்றால் சொல்லவா வேண்டும்?. இரண்டு குழுவாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசிக் கொள்வது மட்டுமின்றி, போட்டி பொறாமையையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

நேற்றைய தினம் பாத்ரூம் மற்றும் ஹவுஸ் கிளீனிங் அணிகள் தேர்வு செய்யப் போட்டி நடைபெற்றது,  இதில் விஜய் மற்றும் அக்ஷயா இடையே நடந்த போட்டியில் ஸ்மால் பாக்ஸ் வீட்டைச் சேர்ந்த விஜய் வெற்றி பெற்றார். அதேபோல் ஐஷு மற்றும் வினுஷா இடையே நடந்த போட்டியிலும், ஐஸ் வெற்றி பெற்றார். எனவே இந்த முறை ஸ்மால் பாஸ் அணியினர் பாத்ரூம் கிளீனிங் மற்றும் ஹவுஸ் கிளீனிங் வேலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம், சமையல் செய்வது ஸ்மூத்தாகச் சென்ற நிலையில் இந்த முறை பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில், அமைதியான போட்டியாளராகப் பார்க்கப்பட்ட நிக்சன் தன்னுடைய கோப முகத்தை வெளிக்காட்டியுள்ளார்.

நிக்சனை பார்த்துப் பிரதீப் உனக்குப் பேசத் தகுதியில்லை உட்காரு எனக் கூறியதாகத் தெரிகிறது. இதைத்தொடர்ந்து கடுப்பான நிக்ஸன், பிரதீப்பிடம் வந்து இதுகுறித்து கேட்டுச் சண்டை போடுகிறார். பின்னர் நீங்க யாரு முதல்ல… நான் உழைச்சு, பாட்டு பாடி, என்னுடைய திறமையை நிரூபித்து உள்ளே வந்துள்ளேன். என்னைப் பார்த்துத் தகுதி இல்லன்னு சொல்ல உனக்குத் தகுதியே இல்லையெனப் பேசுகிறார்.

வெளியே இருந்து பக்காவாக இந்தக் கேம்மை புரிந்து கொண்டு ஸ்டேட்டர்ஜியுடன் நீங்க விளையாடலாம். ஆனா இப்படியொரு கேவலமான ஸ்டேட்டர்ஜிய பயன்படுத்தி ஜெயிக்கணும்னு எனக்கு அவசியமே இல்லை. உன் கிட்ட திறமை இல்லை. என்கிட்ட திறமை இருக்கு. எனவே பாடி காட்டு, ஆடிக் காட்டலாம் பேசாத உனக்கு வரலையா மூடிக்கிட்டு உட்காரு எனப் பொங்கி எழுந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *