Bigg Boss Tamil 7: யுகேந்திரனிற்கு பதிலாக கடைசியாக வேறொரு நபர் வெளியேற்றம்!

Advertisements

பிக்பாஸ் சீசன் 7-ல் பவா யுகேந்திரனிற்கு பதிலாக கடைசியாக வேறொரு நபர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Bigg Boss Tamil 7

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 கடந்த 1ம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பரப்பாகி வருகிறது. இந்த சீசனில் இரண்டு வீடுகள், எவிக்‌ஷன், நாமினேஷன் உள்ளிட்ட பல சுவாரசிய சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. முதல் நாளே பிக்பாஸ் போட்டியாளர்கள் இரண்டு வீட்டிற்கும் பிரிக்கப்பட்டு, சிறிய பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தால் சமையல் செய்ய வேண்டும், பாத்ரூம் கிளீன் செய்ய வேண்டும் போன்ற நிபந்தனைகள் வைக்கப்பட்டன.

இந்த பிக்பாஸ் சீசன் 7-ல் மாயா கிருஷ்ணா, அக்‌ஷயா உதயகுமார், பூர்ணிமா ரவி, பவா செல்லத்துரை, வினுஷா தேவி, டான்ஸர் ஐஷூ, விஜய் வர்மா, சரவண விக்ரம்,கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, யுகேந்திரன் வாசுதேவன், நிக்ஸன், அனன்யா ராவ், ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு விஜய், பிரதீப் ஆண்டனி, விசித்ராம் உள்ளிட்ட போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

முதல் வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் விதிமுறையை மீறிய விசித்ரா, பவா செல்லதுரை சிறிய பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டன. இதற்கிடையே, படிப்பு பற்றிய பேச்சில் விசித்ராவுக்கும், ஜோவிகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விசித்ராவிடம் கோபப்பட்டு ஜோவிகா கத்தி பேசியதை கமல்ஹாசன் கண்டித்த காட்சிகளும் இடம்பெற்றன. முதல் நாளே போட்டியாளர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் விறுவிறுப்பை ஏற்படுத்தியது.

இரண்டாவது வீட்டில் இருப்பவர்களில் யார் மிக குறைந்த ஒட்டுகளை பெறுகிறாரோ அவர் வெளியேற்றப்படுவார் என கூறப்பட்டது. அந்த வகையில் யுகேந்திரன் மிகக் குறைந்த ஓட்டுகளை பெற்றிருந்தார். அவரை தொடர்ந்து பவா செல்லத்துரையும், அனன்யாவும் குறைந்த ஓட்டுகளை பெற்றனர். இதனால், முதலில் யுகேந்திரன் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நிமிடத்தில் யுகேந்திரனுக்கு பதிலாக திரடி டிவிஸ்டாக அனன்யா வெளியேறி இருப்பதாக தகவல் பரவி வருகிறது. Bigg Boss Tamil 7

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *