Bigg Boss Tamil 7: ஒரே பெட்ல படுக்கச் சொன்ன வீடியோ வைரல்!

Advertisements

உங்க கூட ஒரே பெட்ல படுக்கச் சொன்ன… வீடியோ வைரல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டுள்ள பிரதீப் விசித்ராவிடம் வில்லங்கமாகப் பேசி மாட்டிக்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 பேர் பங்கேற்று உள்ளனர். இந்நிகழ்ச்சி தொடங்கி இன்னும் ஒரு வாரம் கூட முடியாத நிலையில், தற்போதே போட்டியாளர்களிடையே பிரச்சனைகள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாகப் பிரதீப் ஆண்டனி தான் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி வருகிறார்.

நேற்று நடைபெற்ற டாஸ்க்கில் பெண் போட்டியாளர்கள் தோற்றால், அவர்களின் மேக்கப் பொருட்களைப் பிக்பாஸிடம் கொடுத்துவிட வேண்டும் என்று கூறப்பட்டது. இதற்குப் பிரதீப் சொன்ன கமெண்ட் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேக்கப்பை கலைத்தால் தான் பெண்களின் உண்மை முகம் வெளியவரும், அதனைப் பார்க்க விரும்புவதாகக் கூறி இருந்தார்.

அவரின் இந்தப் பேச்சுக்குப் பெண் போட்டியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தாங்கள் மேக்கப் போடாமலும் அழகாகத் தான் இருப்போம் என்பதை காட்ட மேக்கப்பை நீக்கிவிட்டு பிரதீப்புக்கு பதிலடி கொடுத்தனர்.

இந்த நிலையில் தற்போது நடிகை விசித்ராவிடம் சர்ச்சைக்குரிய வகையில் பிரதீப் பேசியுள்ள வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி ஆணும், பெண்ணும் ஒரே பெட்டில் படுக்க வேண்டும் என்று பிக்பாஸ் தண்டனை கொடுக்க வேண்டும் எனப் பிரதீப் கூறியதை கேட்டு ஷாக்கான விசித்ரா, அப்படி சொன்னால் நீங்கப் பண்ண மாட்டீங்களேயெனச் சொல்ல, அதற்குப் பிரதீப் நான் பண்ணுவேன் எனக் கூறுகிறார்.

உடனே விசித்ரா மைக் மூலம் பிக்பாஸிடம், இவர் சொன்ன டாஸ்க் நடந்தாகனும் கேட்டதோடு, இவர் மட்டும் தைரியமா என்கூட படுத்துத் தூங்கிட்டா, என் பெயரை மாத்திக்கிறேன் எனச் சவால் விட்டுள்ளார். பின்னர் டென்ஷன் ஆன விசித்ரா, அது எப்படி நீ என்கூட பெட்ல படுத்துத் தூங்கனும்னு சொல்லலாமெனக் கேட்க, உடனே பிரதீப், நான் பெட்ல படுத்துத் தூங்கனும்னு சொல்லல, உங்க பக்கத்துல படுத்துத் தூங்கனும்னு தான் சொன்னேன் என மழுப்பினார். நீ வாடா உண்ணை ஒரே அடியா தூங்க வச்சிடுறேன் என விசித்ரா பேசும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *