Ritika Singh: சிக்ஸ் பேக்ஸ் கிளிக்ஸ்!

Advertisements

சிக்ஸ் பேக்ஸ் வைத்த  ரித்திகா.

நடிகை ரித்திகா சிங் பல படங்களில் நடித்துள்ளார்.இவர் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக உள்ளார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த ‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ரித்திகா சிங். இயல்பிலேயே கிக் பாக்சிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா, அந்த படத்தில் அதே வேடம் என்பதால் கனகச்சிதமாக பொருந்தினார். இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.


இதைத்தொடர்ந்து அசோக் செல்வன் – ரித்திகா நடிப்பில் வெளியான ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் இவரது கதாபாத்திரம் பலரால் பாராட்டப்பட்டது. மேலும், இவர் ‘ஷிவலிங்கா’, ‘குரு’, ‘கொலை’ போன்ற படங்களில் நடித்துள்ளார். பல படங்களில் பிசியாக நடித்து வரும் ரித்திகா சிங் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக உள்ளார். இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.


இந்நிலையில், ரித்திகா சிங் தனது சிக்ஸ் பேக்ஸ் புகைப்படத்தை தற்போது பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *