இந்த வாரம் வெளியேறும் சண்டைக்கோழி – பிக்பாஸ்8!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இந்த வாரம் குறைந்த வாக்குகள் அடிப்படையில் வெளியேறப் போவது யார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தொடங்கி 50வது நாளை நெருங்கி உள்ளது. இந்த வாரம் நாமினேஷனில் இருந்த சிவக்குமாரை ஆண்கள் அணி நாமினேஷன் ஃப்ரீ பாஸ் வாங்கிக் கொடுத்து சேஃப் ஜோனுக்குள் கொண்டு வந்தனர். இதனால் சாச்சனா, ஆனந்தி, வர்ஷினி ஆகியோர் குறைந்த வாக்குகள் அடிப்படையில் டேன்ஜர் சோனில் உள்ளனர். இதில் சாச்சனா மற்ற இருவரை விடவும் குறைந்த வாக்குகள் பெற்று இந்த வாரம் வெளியேற இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முதல் 24 மணி நேரத்திலேயே சாச்சனா வெளியேற்றப்பட்டு சீக்ரெட் ரூமிற்குள் அனுப்பப்பட்டது நினைவிருக்கலாம். பின்பு அடுத்த வாரத்திற்குள் நுழைந்த அவர் பிக்பாஸ் கோப்பையை வென்று விட்டுதான் இந்தச் சீசனை விட்டுச் செல்வேன் என்றார். ஆனால், அவர் இந்த வாரம் வெளியேற்றபட இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *